நாளையும் கொழும்பில் மின்சாரத் தடை ஏற்படும்

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்று அமுல்படுத்தப்பட இருந்த மின்சாரத்தடை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. 

அதனைடிப்படையில் நாளை (28) 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது​. 

கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மின்சாரத் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் கொழும்பில் மின்சாரத் தடை ஏற்படும் நாளையும் கொழும்பில் மின்சாரத் தடை ஏற்படும் Reviewed by Vanni Express News on 7/27/2018 04:07:00 PM Rating: 5