ஜனாதிபதியின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மக்களிடம் இவ்வாரம் கையளிப்பு

பொலன்னறுவையின் மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள 186 அபிவிருத்தி செயற்திட்டங்கள் இவ்வாரம் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளது. 

பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை திறந்து வைக்கப்படவுள்ளன.

இவற்றில் 74 செயற்திட்டங்கள் ஏற்றுமதித்துறை சார்ந்தவையாகும் என்று பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலை வகுப்பறை, விஞ்ஞான கூடம், விளையாட்டு மைதானம், நூலகம், வள நிலையம் போன்ற அபிவிருத்தி செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக 78 கோடி 60 இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

முப்படை வீரர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பூரண பங்களிப்பை வழங்கியிருப்பதாக பொலன்னறுவை மறுமலர்ச்சி செயற்திட்டத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்ஹ தெரிவித்தார்.

குடிநீர் வசதி, வீடமைப்பு, நெடுஞ்சாலை, நீர்ப்பாசனம், மதஸ்தலங்கள், நகர அபிவிருத்தி போன்ற செயற்திட்டங்களும் இதில் முன்னெடுக்கப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு முதல் இதுவரை பொலன்னறுவை அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 160 கோடி ரூபா பெறுமதியான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செயற்றிட்டப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மக்களிடம் இவ்வாரம் கையளிப்பு ஜனாதிபதியின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மக்களிடம் இவ்வாரம் கையளிப்பு Reviewed by Vanni Express News on 7/31/2018 05:09:00 PM Rating: 5