haiiii

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திப் பணிகள் - ஜனாதிபதி

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சீராக்கி, செயற்றிறன் மிக்கதாக மாற்றி மக்களுக்கு கூடுதல் அனுகூலங்கள் கிடைக்க வழிவகுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் முதற் தடவையாக கூடியது.

வடக்குஇ கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சீராக்கிஇ செயற்றிறன் மிக்கதாக மாற்றி மக்களுக்கு கூடுதல் அனுகூலங்கள் கிடைக்க வழிவகுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

வடக்குஇ கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கத்தினால் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன்இ மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

26 வருட யுத்தம் காரணமாக வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளையும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்றே அவ்விரு மாகாணங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2018 ஜூன் 05ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதியினால் இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளதுடன்இ அதன் தலைவராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுகின்றார்.

இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரும் மேலும் 15 அமைச்சரவை அமைச்சர்களும் இரு மாகாணங்களின் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் முப்படை தளபதிகளும் செயற்படுகின்றனர்.

இந்த ஜனாதிபதி செயலணியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடப்படும். முன்னுரிமைய அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து குறித்த துறைகளையும் குழுக்களையும் இலக்காகக் கொண்டு புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மேல் மாகாணத்தினால் 40 சதவீத பங்களிப்பு வழங்கப்படுவதுடன், வட மாகாணத்தினால் 4 சதவீதமும் கிழக்கு மாகாணத்தினால் 6 சதவீதமும் அளவிலான குறைந்த பங்களிப்பே வழங்கப்படுகின்றது.

வடக்குஇ கிழக்கு மக்களுக்காக 50இ000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 25இ000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன்இ மேலும் 10இ000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரு மாகாணங்களிலும் 1847 கிலோமீற்றர் அளவிலான பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன். யாழ்ப்பாணம், மயிலிட்டி,மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி பணி.ளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் இரு மாகாணங்களிலும் கிராமிய பாதைகள்இ குடிநீர் வசதிஇ நீர்ப்பாசனம்இ விவசாயம்இ பொருளாதார நிலையங்கள்இ பாடசாலைகள்இ மருத்துவமனைகள்இ சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு வசதிகளிலும் விரிவான அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதா

மேம்பாட்டுக்காக விரிவான வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்துவதுடன், அம்பாறை சீனி தொழிற்சாலை,மட்டக்களப்பு கடதாசி தொழிற்சாலை மற்றும் நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் தாபித்தல் உள்ளிட்ட கைத்தொழில் துறை மறுமலர்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களினூடாக இவ்விரு மாகாணங்களின் மக்களின் வாழ்க்கையிலும் துரித மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனாரத்ன,சஜித் பிரேமதாசஇ கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரிஷாட் பதியுதீன்,டி.எம்.சுவாமிநாதன்இ பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி, ஜனாதிபதியின் செயலாளர்,பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை தலைமை அதிபாரிகளும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.,
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: வடக்கு, கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திப் பணிகள் - ஜனாதிபதி
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திப் பணிகள் - ஜனாதிபதி
https://4.bp.blogspot.com/-rQdwy1VEv2c/W19Px29v_2I/AAAAAAABNmY/Ptx_Yi7erY8WY2bCKAQzRfl5QJSmRX6IwCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://4.bp.blogspot.com/-rQdwy1VEv2c/W19Px29v_2I/AAAAAAABNmY/Ptx_Yi7erY8WY2bCKAQzRfl5QJSmRX6IwCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/07/president_85.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/07/president_85.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy