விஜயகலா பதவியில் இருந்து விலக்குமாறு பிரதமர் அதிரடி வேண்டுகோள்

சர்ச்சைக்குறிய கருத்து வௌியிட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை அவரை இராஜாங் அமைச்சுப் பதவியில் இருந்து விலக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். 

அவர் மீது முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளமை கூறத்தக்கது.
விஜயகலா பதவியில் இருந்து விலக்குமாறு பிரதமர் அதிரடி வேண்டுகோள் விஜயகலா பதவியில் இருந்து விலக்குமாறு பிரதமர் அதிரடி வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 7/04/2018 12:09:00 AM Rating: 5