சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டம் - பிரதமர் ரணில்

இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல துறைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா நேய முச்சக்கர வண்டி சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமகால சுற்றுலாத்துறையின் முச்சக்கர வண்டிகளுக்கு உள்ள இடம் தவிர்க்க முடியாதது. இந்த வாகனங்களின் வகிபாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ருக் ருக் என்ற பெயரிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் துறைசார்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு அங்கீகாரத்தின் அடிப்படையில் சேவையில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில்,

எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 700 கோடி டொலர் வருடாந்த வருமானத்தை எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு 400 கோடி டொலர் கிடைத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.mangala 01 tamil.news.lkmangala tamil.news.lk
சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டம் - பிரதமர் ரணில் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டம் - பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 7/31/2018 05:51:00 PM Rating: 5