மலசல கூடத்தை துப்பரவு செய்த பிரதேச சபை உறுப்பினர்

நீண்ட காலமாக சுத்தம் செய்யாமல் இருந்த ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குரிய செங்கலடி பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள மலசல கூடத்தினை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நல்லையா சரஸ்வதி சாந்தி சுத்தம் செய்து வைத்தார். 

குறித்த மலசல கூடத்தினை சுத்தமாக வைக்கும்படி தாம் அடிக்கடி சபையிடம் தெரிவித்த போதிலும், அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்தமையினால் தாம் இப்பணியினை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

இச்செயல் பிரதேச மக்களிடையே பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மலசல கூடத்தை துப்பரவு செய்த பிரதேச சபை உறுப்பினர் மலசல கூடத்தை துப்பரவு செய்த பிரதேச சபை உறுப்பினர் Reviewed by Vanni Express News on 7/26/2018 01:23:00 AM Rating: 5