கடலில் மட்டி எடுத்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி


-பாறுக் ஷிஹான்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூதூர் பொலிஸிற்கு முன்னால் உள்ள கடலில், கடல் மட்டி எடுத்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நேற்று (23) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 

இதனை அடுத்து இளைஞனது சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். 

இத்தேடுதல் பணியில் பொதுமக்களுடன் இணைந்து கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர். 

இச்சம்பவத்தில் மூதூர் ஹபீப் நகர் பகுதியைச் சேர்ந்த பி. திலகரட்னம் என்ற 22 வயதான இளைஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 
கடலில் மட்டி எடுத்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி கடலில் மட்டி எடுத்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி Reviewed by Vanni Express News on 7/24/2018 11:53:00 PM Rating: 5