கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில் நேற்று (20) கலந்துகொண்டார். 

கடந்த 18 ஆம் திகதி இயற்கை எய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒரு மணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 

நேற்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக அரசியல் கைதியான சிவகுமார், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார். 

3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். 

2006.08.10 ஆம் திகதி கொழும்பு கரந்தெனியா பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பொரள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். 

நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி சுமதி தெரிவிக்கின்றார். 

இந்த நிலையில் சிவகுமாரிற்கு வழங்கப்பட்ட ஒரு மணி நேர காலம் நிறைவடைந்ததும் அவரை சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து சென்ற போது உறவினர்கள் அவரை தழுவினர். 

13 வருடங்களாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழித்தியது.
கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் Reviewed by Vanni Express News on 7/21/2018 04:01:00 PM Rating: 5