4 வயது குழந்தையை வெறித்தனமாக சீரழித்துவிட்டு புதரில் வீசிச் சென்ற காமுகன்

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 28 வயது காமுகனால் சீரழிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 4 வயது குழந்தை மேலதிக சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. 

மத்தியப்பிரதேசம் மாநிலம், சட்னா மாவட்டம், பரஸ்மனியா பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை தனது பெற்றோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்தது. 

அப்போது அங்கு வந்த ஒரு காமுகன் அந்த குழந்தையை தூக்கிச் சென்று, சற்று மறைவான இடத்தில் வெறித்தனமாக சீரழித்துவிட்டு, அவள் இறந்துப் போனதாக நினைத்து புதரில் வீசிச் சென்றுள்ளான். 

குழந்தையை காணாமல் தவித்தபடி தேடிய பெற்றோர் மிக மோசமான நிலையில் இரத்த காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

நேற்று உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக இன்று அந்த குழந்தை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதற்கிடையில், பச்சிளம் தளிரை இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கிய பாதகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
4 வயது குழந்தையை வெறித்தனமாக சீரழித்துவிட்டு புதரில் வீசிச் சென்ற காமுகன் 4 வயது குழந்தையை வெறித்தனமாக சீரழித்துவிட்டு புதரில் வீசிச் சென்ற காமுகன் Reviewed by Vanni Express News on 7/04/2018 12:56:00 AM Rating: 5