புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு

-JOINT OPPOSITION TAMIL MEDIA UNIT

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மைக்கு பாதிப்பை தவிர்க்க தலையிடுமாறு கோரி  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக  பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

புதிய கலப்பு தேர்தல்  முறையில் சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் அனைத்து தரப்பினாலும் அன்று சுட்டிக்காட்டப்பட்டது.புதிய  தேர்தல் முறைக்கு எதிராக மஹிந்த ராஜபக்‌ஷ அணியே அன்று பாராளுமன்றத்தில் வாக்களித்திருந்தது.

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்கள் பாதிப்படைவார்கள் என்பதை அன்றே நாம் சுட்டிக்காட்டினோம்.ஆனால் அன்று அதற்கு ஆதரவாக வாக்களித்த சிறுபான்மை கட்சி தலைவர்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றனர்.இன்று பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பெரும் சக்தியாக விளங்கும் மஹிந்த அணியின் உதவியை கொண்டே மிக இலகுவாக  மீண்டும் பழைய முறையில் தேர்தலை நடத்த செய்ய முடியும். 

எனவே சிறுபான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய அநீதியை  நிவர்த்தி செய்ய உதவக்கோரி  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்‌ஷவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை  எதிர்வரும் தினங்களில் நடத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.
புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு புதிய தேர்தல் முறையை ரத்து செய்ய மஹிந்தவின் உதவியை பெற முஸ்தீபு Reviewed by Vanni Express News on 7/24/2018 05:33:00 PM Rating: 5