அனைத்து அரச பாடசாலைகளுக்கும் 3ம் திகதி விடுமுறை

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட்ட மாதம் 03ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது. 

அதன்படி அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை நடைபெற உள்ள உயர் தரப் பரீட்ரைசகளுக்காக நடத்தப்படுகின்ற பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கையேடுகளை அச்சிடுதல், மாதிரி வினாத்தாள்களை விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளுக்கும் 3ம் திகதி விடுமுறை அனைத்து அரச பாடசாலைகளுக்கும் 3ம் திகதி விடுமுறை Reviewed by Vanni Express News on 7/31/2018 04:23:00 PM Rating: 5