மாவனல்லை மற்றும் ஹெம்மாத்தகம மக்களின் தாகம் தணிந்தது - நெதர்லாந்தில் இருந்து குடி நீர் வழங்கல் திட்டம்

-ஊடகப்பிரிவு

கேகாலை மாவட்டம் மாவனல்லை, அரநாயக்க மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 25,000 குடும்பங்களுக்கு சீராக குடிநீர் வழங்குவதற்காக ஹெம்மாதகம குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு நெதர்லாந்து அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு நிதி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்றது.

65 மில்லியன் யூரோ செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த 62 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 25,000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. 

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாரிய பிரச்சினையாக காணப்படும் குடி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக, புதிய திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் மூன்று லட்சம் மில்லியனை செலவிட்டடுள்ளதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, பெருந்தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம், பிரஸ்தாப அமைச்சின் செயலாளர் ஹப்புஆரச்சி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான், இலங்கைக்கான நெதர்லாந்தின் உயர்ஸ்தானிகர் ஜோன் டோர்னீவார்ட் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாவனல்லை மற்றும் ஹெம்மாத்தகம மக்களின் தாகம் தணிந்தது - நெதர்லாந்தில் இருந்து குடி நீர் வழங்கல் திட்டம் மாவனல்லை மற்றும் ஹெம்மாத்தகம மக்களின் தாகம் தணிந்தது - நெதர்லாந்தில் இருந்து குடி நீர் வழங்கல் திட்டம் Reviewed by Vanni Express News on 7/05/2018 11:27:00 PM Rating: 5