உத்தியோகபூர்வ அழைப்பையேற்று SLPPயின் கட்சி தலைமையகத்திற்கு சென்ற கோட்டாபய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

தங்களுடைய கட்சி காரியாலயத்திற்கு வருகை தருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை விடுத்திருந்தார். 

அதனடிப்படையில் இன்று (04) காலை 11 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷ குறித்த கட்சி தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதுடன், அது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 21 மாகாண சபை உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ அழைப்பையேற்று SLPPயின் கட்சி தலைமையகத்திற்கு சென்ற கோட்டாபய உத்தியோகபூர்வ அழைப்பையேற்று SLPPயின் கட்சி தலைமையகத்திற்கு சென்ற கோட்டாபய Reviewed by Vanni Express News on 7/04/2018 05:30:00 PM Rating: 5