அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை

சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் போது அங்கு புலனாய்வு பிரிவொன்றை நடத்திச் செல்வதில் அவசியம் இல்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார். 

சிறைச்சாலை புலனாய்வு பிரிவை உடனடியாக கலைக்குமாறு அண்மையில் வௌியிட்ட உத்தரவு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

இது சம்பந்தமாக தனக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், புலனாய்வு பிரிவுகள் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார். 

அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை Reviewed by Vanni Express News on 7/28/2018 02:55:00 PM Rating: 5