மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியலை நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் 18 கைதிகளுக்கு போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு அடுத்த வாரம் முதல் நடவடிக்கை ஆரம்பிப்தாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு Reviewed by Vanni Express News on 7/15/2018 10:47:00 PM Rating: 5