விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம்

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அரசகரும மொழிகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் பெறப்பட்ட 50 பேரில் 30பேர் தமிழ் மொழியில் வாக்குமூலம் வழங்கியுள்ளமையினால், அவர்களது வாக்குமூலம், மொழிபெயர்ப்பிற்காக அரசகரும மொழிகள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளது.

இதன்படி, வாக்குமூலங்களின் அனைத்து உள்ளடக்கங்களையும்  எதிர்வரும் 2 வாரங்களுக்குள் சட்டமா அதிபரிடம் கையளிக்க இரண்டு வாரகால அவகாசம் எடுக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலம் பெறப்பட்டவர்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் வஜிர அபேவர்தன, நாடாமன்மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் 50 பேரிடம் வாக்குமூலம் Reviewed by Vanni Express News on 7/28/2018 04:59:00 PM Rating: 5