அமெரிக்காவை அழித்து விடுவோம் ஈரான் சிறப்பு படை எச்சரிக்கை

ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், "அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்" என ஈரான் சிறப்பு படை கமாண்டோ ஜனாதிபதி டிரம்பை எச்சரித்துள்ளார். 

டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும் என்று மேஜர் ஜெனரல் கசிம் உறுதி பூண்டுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டன்ஸிம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதி டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருபோதும் அமெரிக்காவை மிரட்ட வேண்டாம் என்று ஈரான் ஜனாதிபதியை எச்சரித்து பதிவிட்டதை தொடர்ந்து கசிம் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்காவை அழித்து விடுவோம் ஈரான் சிறப்பு படை எச்சரிக்கை அமெரிக்காவை அழித்து விடுவோம் ஈரான் சிறப்பு படை எச்சரிக்கை Reviewed by Vanni Express News on 7/27/2018 11:18:00 PM Rating: 5