தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் - மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு மாகாணத்திலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்தில் இருந்து நீர்கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் - மழை அல்லது இடியுடன் கூடிய மழை தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் - மழை அல்லது இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 7/30/2018 03:13:00 PM Rating: 5