5 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்

கொழும்பு - முல்லேரியாவ பகுதியில் 5 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நபரை சிறுமியின் தாய் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்த 5 வயதான சிறுமியை குறித்த நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் சிறுமி சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அந்த நபரை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த சிறுமியின் தாய், கத்தியால் குத்தியதில் சந்தேக நபர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
5 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த தாய் 5 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த தாய் Reviewed by Vanni Express News on 8/03/2018 11:07:00 PM Rating: 5