பேருந்து விபத்து ஒருவர் பலி 7 பேர் காயம்

அம்பலாந்தொட்ட - நோனாகம பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

கொழும்பு இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேருந்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ள நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகி நோனாகம வாவியில் வீழ்ந்துள்ளதாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட, நோனாகம பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

விபத்தில் பேருந்து மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதோடு, ஹூங்கம பொலிஸார் மேலுதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து விபத்து ஒருவர் பலி 7 பேர் காயம் பேருந்து விபத்து ஒருவர் பலி 7 பேர் காயம் Reviewed by Vanni Express News on 8/10/2018 05:33:00 PM Rating: 5