கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் இரு புகையிரதங்கள் மோதி விபத்து 32 பேர் காயம்


இரு புகையிரதங்கள் விபத்துக்குள்ளானதில் 32 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே இரண்டு புகையிரதங்கள் மோதிக்கொண்டதில், புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த புகையிரத விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல, குருணாகல், ரம்புக்கனை மற்றும் கோகலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிற்பகல் 4.30 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் இயந்திர கோளாறு காரணமாக பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது பின்னால் வந்த மற்றுமொரு புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் இரு புகையிரதங்கள் மோதி விபத்து 32 பேர் காயம் கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் இரு புகையிரதங்கள் மோதி விபத்து 32 பேர் காயம் Reviewed by Vanni Express News on 8/06/2018 10:49:00 PM Rating: 5