மொனராகலை, வெல்லவாய பிரதான வீதியில் விபத்து - 3 பேர் பலி

மொனராகலை, வெல்லவாய பிரதான வீதி, கும்புக்கன சந்திப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

லொறி ஒன்று பஸ் ஒன்றை முந்திச் செல்லும் போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

நேற்று இரவு 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

08 வயதுடைய சிறுவன், 22 வயதுடைய இளைஞன் மற்றும் 19 வயதுடைய யுவதி ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளதுடன், 49 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

விலஓய, எதிமலே வீதி பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களே விபத்தில் சிக்கியவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை, வெல்லவாய பிரதான வீதியில் விபத்து - 3 பேர் பலி மொனராகலை, வெல்லவாய பிரதான வீதியில் விபத்து - 3 பேர் பலி Reviewed by Vanni Express News on 8/05/2018 05:01:00 PM Rating: 5