புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் தற்காலிகமாக பணி நீக்கம்

பொல்கஹவெல, பனலிய பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதன்படி ரம்புக்கனை புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர், கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோரே இவ்வாறு தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். 

நேற்று (06) மாலை கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் போது, பின்னால் வந்த மற்றுமொரு புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. 

இந்த விபத்தில் 32 ​பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணகைளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா புகையிரத பொது முகாமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். à®ªà¯à®•à¯ˆà®¯à®¿à®°à®¤ விபத்து தொடர்பில் நால்வர் தற்காலிகமாக பணி நீக்கம்
புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் தற்காலிகமாக பணி நீக்கம் புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் தற்காலிகமாக பணி நீக்கம் Reviewed by Vanni Express News on 8/07/2018 04:29:00 PM Rating: 5