யானையுடன் மோதிய வேன் மொஹம்மட் நவீத் பலி - நால்வர் வைத்தியசாலையில்

-பாறுக் ஷிஹான்

கொழும்பிலிருந்து கிண்ணியா, மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று நேற்றிரவு (08) ஹபரணை காட்டுப்பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவத்தில் கிண்ணியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மொஹம்மட் நவீத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

யாருமில்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதால் குறித்த நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஹபரனைக்கும், ஹதரஸ் கொட்டுவைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த வேன் அதிக வேகமாக சென்றதன் காரணமாக வீதியில் நின்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
யானையுடன் மோதிய வேன் மொஹம்மட் நவீத் பலி - நால்வர் வைத்தியசாலையில் யானையுடன் மோதிய வேன் மொஹம்மட் நவீத் பலி - நால்வர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 8/09/2018 03:43:00 PM Rating: 5