மீஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி - 2018

மத்திய மலைநாட்டின்,அக்குரணை நகரில் குருகொடை எனும் எழில் மிகு கிராமத்தை அழகூட்டி நிற்கும் மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் அல் குர்ஆன் மனனப் பகுதிக்கு மாணவர்களை  சேர்த்துக்கொள்வதற்கான  நேர்முகப் பரீட்சை எதிர் வரும் 2018/08/12  திகதி ஞாயிற்றுக் கிழமை  காலை 09:00 மணிக்கு கல்லூரியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11-13 வயதிற்கிடைப்பட்ட, அல் குர்ஆனை சரளமாக ஓதத்தெரிந்த மாணவர்கள் தமிழ் மொழிப் பிரிவிற்கு மாத்திரமல்லாது ஆங்கில மொழிப் பிரிவிற்கும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

ஏற்கனவே நேர்முகப் பரீட்சைக்கு  விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்காதோர் அனைவரும் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ள முடியும்.

நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்கும் போது மாணவரின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரப் பிரதியுடன் மாணவரின் கல்வித் தரத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் கொண்டு வரவும் .

 📞 மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள பின்வரும் தொலைபேசி  இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும். 
📱0761003436
📱0718386009
☎0812301506

http://www.meezaniyyah.com/gallery.php

http://www.meezaniyyah.com/admissions.php
மீஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி - 2018 மீஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி - 2018  Reviewed by Vanni Express News on 8/07/2018 04:22:00 PM Rating: 5