15 வயது மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய அதிபர் கைது

15 வயது மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் குறித்த பாடசாலை மாணவி, சுத்தம் செய்யும் பணிக்காக அழைக்கப்பட்டு, அதிபரினால் பாலியல் இடையூறுகள் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 3 ஆசிரியர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
15 வயது மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய அதிபர் கைது 15 வயது மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய அதிபர் கைது Reviewed by Vanni Express News on 8/04/2018 11:59:00 PM Rating: 5