16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில்16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

16 வயது நிரம்பிய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

அதே பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 27 வயது நிரம்பிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தனது ஆடையற்ற புகைப்படத்தை காட்டி இந்த ஆண்டு 03ம் மாதத்தில் இருந்து தன்னை அந்த உத்தியோகத்தர் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்ததாக அச்சிறுமி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரும் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட சிறுமியும் அயல் வீடுகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்படத்தக்கது. 
16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது 16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது Reviewed by Vanni Express News on 8/04/2018 05:02:00 PM Rating: 5