கிண்ணியாவில் 316 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா 6 ஆம் வட்டாரம் மற்றும் 2 ஆம் வட்டார பிரதேசங்களில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு சந்தேக நபர்களை கைது செய்ததாக திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களிடம் இருந்து 316 போதை மாத்திரைகளுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளையும் சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நோக்கில் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 
கிண்ணியாவில் 316 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது கிண்ணியாவில் 316 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது Reviewed by Vanni Express News on 8/06/2018 05:25:00 PM Rating: 5