பொலிஸாரினான் சுற்றி வளைப்பில் 175 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

வாழைத்தோட்டம், செக்குவத்த பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது குறித்த நபரிடம் இருந்து ´யாபா´ எனும் 175 போதை மாத்திரைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரினான் சுற்றி வளைப்பில் 175 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது பொலிஸாரினான் சுற்றி வளைப்பில் 175 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 8/07/2018 04:05:00 PM Rating: 5