ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

-க.கிஷாந்தன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் 410 மில்லிகிராம் போதை பொருளுடன் ஒருவர் நேற்று இரவு 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் உடம்பில் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த போது குறித்த போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதை பொருள் வர்த்தகம் மிகவும் சூட்சபமான முறையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹட்டன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 8/09/2018 03:32:00 PM Rating: 5