மு.காவின் வன்னிப்போரளிகளே!!! இன்னுமா ஏமாறுகிறீர்கள் ? ? ?

-எ.எம்.றிசாத்.

மர்ஹும் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்த காலம் தொட்டு தொடர்ச்சியாக அந்த கட்சியின் ஊடாக பாரளுமன்றத்துக்கு பிரதிநிதித்துவத்தை அனுப்பி வந்த வன்னி மாவட்ட முஸ்லிம்கள், தலைவர் ஹக்கீம் தலைமைப்பொறுப்பை ஏற்ற பின்னர் அக்கட்சியை வெறுக்கத் தொடங்கியமைக்கு கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் கோட்டைவிட்டமை சிறந்த சான்றாகும்.

மர்ஹும் அஷ்ரபின் காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தில் இருந்த வன்னி மாவட்டத்தை சேர்ந்த பொறியியலாளர் புர்கானுதீன், டாக்டர் தஸ்தக்கீர், மன்னார் தஸ்லீம், சி.எஸ்.தாஜுதீன் போன்றவர்கள் இன்று ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகளினால் அதிருப்தியுற்று வெளியேறி மெளனிகளாகிவிட்டனர்.

கடந்த பொதுத்தேர்தலில் வன்னிக்கு சென்ற மு.கா தலைவர் ஹக்கீம், அந்த மாவட்டத்தில் சந்திக்கு சந்தி மேடை அமைத்து அமைச்சர் றிஷாட்டை விமர்சித்து இம்முறை அவரை வீட்டுக்கு அனுப்புவோம் “என சூளூரைத்தார். முல்லைத்தீவு வெலி ஓயாவில் இருந்தும் மக்களை கூட்டி வந்து சோற்றுப்பார்சல்களை கொடுத்து வழிச்செலவுக்கு பணமும் கொடுத்து மன்னார் பொது நூல் நிலையத்தில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றை  மு.கா ஏற்பாடு செய்தது. அதன் மூலம்  றிஷாட்டுக்கு எதிரான  பெரிய அலையிருப்பதாக காட்டி மு.கா வின் செல்வாக்கு அதிகரித்துள்ளதக வெளியுலகத்துக்கு காட்டுவதே அவர்களின் தந்திரோபாயம்.

எனினும் சீசன் வியாபாரிகளான இவர்களின் தேர்தல் யுக்திகளையும்,எமாற்று நாடகங்களையும் வன்னி மக்கள் அடையாளம் கண்டு விட்டதனால் மு.கா மண் கவ்வியது பொதுத்தேர்தல் முடிவின் பின்னர் மு.கா வினர் “துண்டைக்காணோம் துணியைக் காணோம்” என்று வன்னியை விட்டு ஓட்டம்பிடித்தனர்.

இது இப்படி இருக்க வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மஸூரின் மறைவின் பின்னர் ஐ.தே.க வேட்பாளராக மு.காவுடன் இணைந்து போட்டியிட்ட  முத்தலிப் பாவா பாரூக் அடுத்த இடத்தில் இருந்ததனால் எம்.பி யானார். கடந்த பாரளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் சிறிது காலம் இவர் எம் பியாக இருந்தார் . பாரளுமன்றத்துக்கு சென்ற அடுத்த கணமே மு.கா வுக்கு இவர் பல்டி அடித்தமை தெரிந்ததே.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எம்.பி யாக இருந்து கட்சியின் உயர் பதவியை வகித்த ஹுனைஸ் பாரூக், தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் பொதுத்தேர்தலுக்கு சிறிது காலத்துக்கு முன்பு ஐ.தே.கவுக்கு  தாவி அங்கே தனது சித்து விளையாட்டுக்கள் பலிக்காததால் மைத்திரியின் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தார்.அமைச்சர் றிஷாட்டுக்கு ஐ.தே.க வில் போட்டியிடுவதற்கு ஆசனம் வழங்க கூடாது என்பதே இவரின் நிபந்தனை. பின்னர்  தனது அரசியல் எதிரியான றிஷாட்டை வீழ்த்துவதற்காக அரசியலில் நாட்டம் காட்டாமல் இருந்த தொழிலதிபர் காதர் மஸ்தானை, தேர்தல் வலையில் சிக்கவைத்து முன்னாள் பிரதியமைச்சர் சுமதிபாலவுடன் கூட்டு சேர்ந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வன்னியில் தான் எம் .பி யாகிவிடலாம் என கனவுகண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் வெலி ஓயாவில் மஹிந்தவின் படத்தையும் வ்வுனியா மன்னார் மாவட்டத்தில் மைத்திரியின் படத்தையும் போஸ்டர்களில் பயன்படுத்தினார்.

எனினும் விதி வேறு விதமாக இருந்தது இந்த நிலையில் ஹுனைஸ் பாரூக் மு.கா வில் இணைந்து கொண்டு வடக்கில் மாத்திரம் இன்றி கிழக்கில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு சென்று அமைச்சர் றிஷாட் மீது அபாண்டங்களை பரப்பி எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொண்டு ஹகீமை மனம்குளிர வைத்தார்.மின்னல் ரங்காவுடன் சேர்ந்து இவர் ஆடிய கும்மாளங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.

மு.கா வின் தேசியப்பட்டியல் எம் பி பதவியை எப்படியாவது தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நப்பாசையிலேயே இப்போதும்  இருக்கும் ஹுனைஸுக்கு உயர்பீடத்திலும் ஆப்பு வைத்துள்ளார் சாணக்கிய தலைவர்.

வன்னி மாவட்டத்தில் ஆமையைப்போல் இருந்து முட்டைகளை யிட்டுவரும் முத்தலிப் பாவா பாரூக் உயர்பீட்த்தில் உள்வாங்கப்பட்டுள்ளார். தலைவர் ஹக்கீம் என்ன தான் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அதனையெல்லாம் தாண்டி தான் நினைத்தவற்றை செய்து வருவது சபீக ரஜாப்டீனுக்கு பதவி வழங்கியமை சாட்சி. .

தேசியப்பட்டியல் எம்.பி யான நசீரின் பதவியை ஹுனைஸ் பாரூக்குக்கு தலைவர் வழங்குவார் என்ற கனவில் அவரின் எச்சச்சொச்ச ஆதரவாளர்கள் இன்னும் சஞ்சரிக்கின்றனர்.

வன்னியை பொறுத்தமட்டில் மு.கா வின் உண்மைப்போராளிகள் விரக்தியடைந்துள்ளனர் புதியவர்கள் கட்சிக்குள் வந்து எம்.பி பதவிக்கு ஆசைப்படுவது எந்த வகையில் நியாயம் என அவர்கள் கேட்கின்றனர்.வன்னியின் மு.கா வின் கோட்டையாகவும் முஸ்லிம் காங்கிரசின் தூணாக இருந்த மஷூரின் தாயகமான எருக்கலம்பிட்டியை தலைவர் கெளரவபடுத்த மறந்ததேன்??

ஒட்டுமொத்தத்தில் மு கா வின் உயர்பீடத்தில் உண்மையான கட்சி விசுவாசிகளோ கட்சியை வளர்த்தவர்களோ இடம்பெறவில்லை சில வேளை வாதத்திற்காக மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி பாயிஸுக்கு மு.கா வில் உயர்பதவி வழங்கப்பட்டு வன்னி கெளரவிக்கப்படுகிறதே என்று போராளி குஞ்சுகள் கூறினால் அவர்களைப்போன்று மடையர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றே கூற வேண்டும்.

ஏனெனின் ஹக்கீமின் நெருங்கிய விசுவாசியாகவும் 16 வருடங்களாக மு.கா வின் வெளிவிவகாரப்பணிப்பாளராக இருக்கும் சட்டத்தரணி பாயிஸ் வன்னி மக்களின் நல் வாழ்வுக்காக செய்த சேவைகளை மு.கா போராளி குஞ்சுகள் பட்டியலிட்டு காட்டட்டும்.
மு.காவின் வன்னிப்போரளிகளே!!! இன்னுமா ஏமாறுகிறீர்கள் ? ? ? மு.காவின் வன்னிப்போரளிகளே!!! இன்னுமா ஏமாறுகிறீர்கள் ? ? ? Reviewed by Vanni Express News on 8/06/2018 05:32:00 PM Rating: 5