ஆயுதத்தினால் தலை குணிந்த சமூகம், ஜனநாயகத்தினால் இன்று நசுக்கப்படுகின்றது.

-ஐனுதீன் கிண்ணியா, சவூதியிலிருந்து.

ஆட்சி அதிகாரங்களினால்  தலைகுணிந்த ஒரு சமூகம் இன்று ஜனநாயகத்தால் நசுக்கப் படுகிறது என்றால் அது இலங்கை வாழ் முஸ்லிம்களாகத்தான் இருக்கும் என்பது இந்த எனது கட்டுரையினை வாசிக்கும் போது உணரமுடியும்.

அதாவது, இலங்கை முஸ்லிம்கள் ஒரு நீண்டவரலாற்றைக் கொண்ட ஒரு தனிக் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்பது எமக்கு தெரிந்த விடயம். அதே நேரம் தமிழ் மக்களை தம் சகோதரராகவும் எண்ணி வாழ்ந்து தமிழ் மொழி பேசுபவர்கள் நாங்கள். இப்படி வாழும் முஸ்லிம்களான  எம்மை பல வழிகளினாலும் நசுக்கப்பட்டு இன்று மிகவும் ஆபத்தான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பது தெரிந்தும் தெரியாதவர் போல் இருக்கின்றாா்கள் எமது தலைமைகள்.

இலங்கையில் நடந்த முப்பது வருட கால யுத்தில் திட்டம் போட்டு நசுக்க பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். ஆரம்பகாலத்தில் விடுதலைப் புலி அமைப்புக்கும் இரணுவத்துக்கும் இடையில்  நடந்த ஆயுதப் போரினால் இரு  சாரார்களும் படித்த கல்வி கற்ற முஸ்லிம்களை கொலை செய்து எம்மை தூரநோக்கற்ற ஒரு சிந்தனையற்ற சமூகமாக மாற்றிய காலத்தில் ஒரு சிந்தனைச் சிற்ப்பி தோன்றினார் அவர்தான் எமது மர்ஹூம் அஸ்ரப் அவர்கள். இதை உணர்ந்த இனவாதம் அவரையும் இல்லாது செய்து, வடக்கு கிழக்கில் வாழ்ந்த படித்தவர்களை தேடித் தேடி கொன்று குவித்தனர். இதனால் நூற்றுக்கணக்கான கல்வியாளர்களையும் நல்ல திறன் கொண்ட  அரசியல்வாதிகளையும் இழக்க நேர்ந்தது முஸ்லிம் சமூகம்.

இதன் பின்னேர் அடுத்த திட்டத்தை தீட்டியது தீவிரவாதத்தின்  அரசியல் அமைப்பு கருப்பு ஜூலை என்று அழைக்கப்பட்ட ஜூலைக் கலவாரத்தில் எப்படி தமிழர்களின் வியாபாரங்கள் ஒரு நாளைக்குள் நாடு முழுவதும் அன்று  தீ இட்டுக் எரிக்கப்பட்டதோ அதே போல், படிப்படியாக முஸ்லிம்களின் வியாபார நிலையங்களையும் எரித்ததோடு மற்றுமல்லாமல் ஆடு மாடுகளையும் அழித்து எமது சில முதலாளிகளையும் கடத்திக் கொலை செய்தாா்கள். இவைகள் கிழக்கில் அதிகமானலும் நாடு பூராகவும் முஸ்லிம் முதலாளிகள் கடத்திய சம்பவங்கள் அதிகமாகும் இதில் கிண்ணியா, மூதூர் , மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரை பற்று என பல ஊர்களிலுள்ள வியாபாரக் கட்டடங்கள் முற்றாக தீயிட்டு எரிக்கப்பட்டது. மேலும், முஸ்லிம்களின் விளை நிலங்கள் பறிக்கப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெரும்பாலான முஸ்லிம்களை விவசாயம் செய்யாது தடைவிதித்தது மட்டும் அல்லாது அந்த நிலங்களில் தமிழ் சகோதரர்களை விவசாயம் செய்ய அனுமதித்து  எமது மக்களின் பொருளாதாரத்தை முற்றாகவே நசுக்கியது தமிழ்த் தீவிரவாதம்.

மேலும், இவைகளைச் செய்து முஸ்லிம்களை அடிமைப்படுத்த முடியாமல்ப் போனவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாக வடக்கிலிருந்து முஸ்லிம்களை வலுக் கட்டாயமாக  வெளியேற்றி அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு வெறும் 500 ரூபாவை கையில்க் கொடுத்து துரத்தி அடித்தாா்கள். இந்த வரலாற்றுத் துரோகத்தை கிழக்கிலும் கட்டவிழ்த்து விட எண்ணி எமது மக்கள்கள் பள்ளிவாயலில் தொழுது கொண்டிருக்கும் போதும் வீடுகளில் உறங்கிக் கொண்டு இருந்த போதும் கத்தியினால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் அண்ணன் தம்பியாகப் பழகி சோறு போட்டவர்களை துடிக்கத் துடிக்க கழுத்தறுக்கப் பட்டும் , கர்பிணித் தாய்களின் வயிற்றைக் கிழித்து சிசுக்களை சுவற்றில் அடித்தும் கொலை செய்து  பல ஆயிரக்கணக்கான எமது உயிர்களை இல்லாமல்ச் செய்தது மட்டுமின்றி அன்று காத்தங்குடி பள்ளியில் நிராயுதபாணிகளாக தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்களை ஒரு சில நொடிப் பொழுதினில்  சுட்டுக் கொன்றும்  எம்மை விரட்டியடிக்க முடியாது போனது கிழக்கு மண்ணில். காரணம், வடக்கை விட சிங்கள மக்கள் கிழக்கில் சரி சமனாக வாழ்ந்த ஒரு நிலையால் இராணுவமும் அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முஸ்லிம்களுக்கு பல உதவிகளைச் செய்தாா்கள்.

இந்த காலகட்டத்தில் எமக்கு ஒரு அரசியல்ரீதியான பாதுகாவல் வேண்டும் என்று மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் காங்காரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி பல நகர்வுகளை செய்தும் அவரை செய்ய விடாத வாறு சர்வதேசத்தில் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது தமிழ் தீவிரவாதம்.. அவர்கள் அமெரிக்கா ,லண்டன், சுவிஸ், கனடா, நேர்வே, இந்தியா போன்ற நாடுகளை தூண்டிவிட்டு எமக்கு ஞாயமாக கிடைக்க வேண்டிய உதவிகளையும் தடுத்து பேச்சு வார்த்தைகளின் போது எம்மை இலங்கை  முஸ்லிம்கள் என்று இனம் காட்டாது இலங்கையில் வாழும் "ஒரு இனம்"  என்றும், இலங்கை வாழும்  "மற்றவர்கள்" என்றும் சில அரசியல் தீர்வுகளில் சர்வதேச முன்னிலையில் எழுதவைத்தனர் .இதனால் ,அன்று எமக்கு கிடைக்க இருந்த அரசியல் அமைப்பு சீர் திருத்த சட்டகள் கூட இழக்க நேரிட்ட கசப்பான வரலாறு உண்டு.

இப்படியான அனைத்து வகையான சதிகளில் சிக்கி வாழ்வாதாரங்களையும், உயிரையும்,  இருப்பையும் இழந்து வந்த முஸ்லிம் சமூகம் . கடைசியில் மூதூர் மாவிலாற்றில் ஆரம்பித்த போர் ஒரு முடிவைத் தந்தது .அதுதான் இறுதி யுத்தம் இந்தப் போரின் முடிவில் தோல்வி கண்ட தமிழ் தீவிரவாதம் இப்போது ஜனநாயக ரீதியில் முஸ்லிம்களை திட்டம் தீட்டி தாக்க தொடங்கியுள்ளது. எதிர் கட்சியின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு வடக்கு கிழக்கில் இவர்களினால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியேறவிடாமல் தடை போடும் அதே வேளை கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் அத்து மீறிய  குடியேற்றங்களின் மூலம் கிழக்கிலங்கையில் தமிழ் விகிதாசரங்களை அதிகரிக்க வைத்து  அதன் மூலமாக அதிகமான வாக்குக்களை பெற்று முஸ்லிம் மக்களின் உறுப்புரிமைகளை இழக்க வைத்ததன் விளைவு இன்று கிழக்கில்  கூட்டணியின் துணைகள் இன்றி உள்ளூராட்சி சபைகளைக் கூட முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்கள் கைபற்ற முடியாத ஒரு நிலையை திட்டம் போட்டு நிறைவேற்றியுள்ளது. 

கல்முனை முஸ்லிம்களின் பூர்வீகமான சபை இன்று கூட்டணியின் துணை இன்றி ஆட்சி அமைக்க முடியாது போனது. மற்றும் கிண்ணியா நகர சபை , மூதூர், குச்சவெளி என்று பல உள்ளூராட்சி சபைகள் தமிழ் கட்சியின் துணை இன்றி ஆட்சி அமைக்க முடியாது போனது. இனி வட மாகாணத்தை கைபற்றிய இவர்களின் அடுத்த திட்டம் கிழக்கு மாகாணமாகும் .இதுக்காகத்தான் எமது முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒன்றிணையவிடாது ஊருக்கு ஒரு முஸ்லிம் தலைவர்களை தோற்றுவித்து மாவட்டத்துக்கு ஒரு கட்சியாக முஸ்லிம்களின் வாக்குப் பலத்தை சிதரவைத்து விட்டார்கள்.

இன்று எதிர்க்கட்சி தவைரில்லாது முஸ்லிம்களின் பிரதேச அபிவிருத்தி இல்லை என்ற நிலை வந்துள்ளது. கிண்ணியாவில் அண்மையில் திறக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடம் மற்றும் கிண்ணியா பஸ் தரிப்பு நிலையம் இரண்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத கூட்டணித்தலைவர் சம்பந்தனின் பெயர் எப்படி அந்தக் கல்வெட்டுக்களில் வந்தது என்று சிந்தித்துப் பாருங்கள் தெளிவு வரும். அதே வேளை சம்மந்தர் ஐயா செய்யும் அபிவிருத்திகளில் கல் நாட்டு விழா கட்டடத் திறப்பு விழக்களில்  உள்ள கல் வெட்டுக்களில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் இணைத் தலைவர் என்பதுக்காக வேண்டி அப்துல்லா மஹ்ரூப் எம், பி அவர்களின் பெயரை இவர்கள் பதிப்பாா்களா? இல்லவே இல்லை ஆனால் முஸ்லிம்களின் பள்ளி வாசல் திறப்பு விழா என்றாலும் கூட்டணியின் சம்மதம் இல்லாது செய்ய முடியாத  ஒரு மோசமான நிலைக்கு இன்று இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டுள்ளாா்கள் என்பது மட்டும் உண்மையாகும்.

ஆயுதங்களினால் அன்று நசுக்கப் பட்ட முஸ்லிம்கள் இன்று ஜன நாயகரீதியாகவும் நசுக்கப் படுகின்றாா்கள்.இதிலிருந்து எமது எதிர்கால சந்ததிகள் பாதுகாக்கப் படவேண்டுமானால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எப்படி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி என்ற அரசியல் கட்சி மூலம் உரிமைகளை வென்று எடுக்கின்றாா்களோ அதே போல் நாங்களும் கட்சி பேதங்கள் மறந்து ஒரு அரசியல்ரீதியாக  முஸ்லிம் கூட்டணி அமைத்து வடக்கு கிழக்கில் போட்டி இட்டு பொதுத் தேர்தலிலும் நிலையாக நின்று எமது உரிமைகளை வென்று எடுக்க வேண்டும் . இல்லையென்றால் இன்னும் பல ஆண்டுகளில் நாங்கள் இலங்கை வாழ் அடிமைகள் என்று சரவதேசம் அழைக்கும் அளவுக்கு வந்து நசுக்கப் படுவது உறுதி.
ஆயுதத்தினால் தலை குணிந்த சமூகம், ஜனநாயகத்தினால் இன்று நசுக்கப்படுகின்றது. ஆயுதத்தினால் தலை குணிந்த சமூகம், ஜனநாயகத்தினால் இன்று நசுக்கப்படுகின்றது. Reviewed by Vanni Express News on 8/04/2018 04:23:00 PM Rating: 5