சிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள்

-எம்.ஐ.முபாறக்

சிகரெட் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் பாவனை குறைகின்றமை உண்மைதான்.

சிகரெட்டின் பாவனைதான் குறைந்திருக்கின்றதே தவிர புகைத்தல் அல்ல.புகைத்தலுக்கு அடிமையானவர்கள் மலிவான புகைத்தலை நாடுகின்றனர்.மிகவும் மலிவாகக் கிடைப்பது பீடிதான்.

சிகரெட் ஒன்றின் விலையை 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு முன் 14 பீடிகள் கொண்ட பீடிக் கட்டு ஒன்றின் விலை முப்பது ரூபாவாக இருந்தது.சிகரெட்டை 50 ரூபாவாக அதிகரித்ததும் எமது இளைஞர்கள் சிகரெட்டை கைவிட்டுவிட்டு பீடியை நாடினர்.

பீடிக்கு ஏற்பட்டுள்ள கிராக்கிய அறிந்த பீடி முதலாளிமார் ஒரு கட்டு பீடியின் விலையை 30 ரூபாவில் இருந்து 60 ரூபாவாக அதிகரித்தனர்.

இப்போது சிகரெட் மேலும் 5 ரூபாவால் அதிகரிகரிக்கப்பட்டுள்ளதால் பீடி முதலாளிமார்களின் காட்டில்தான் மழை.இன்னும் ஓரிரு ரூபாவை அவர்கள் அதிகரிக்கக்கூடும்.

இருந்தாலும்,எமது அப்பாவி இளைஞர்களுக்கு வேறு வழியில்லை.இருப்பதில் எது விலை குறைந்ததோ அதை நாடவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

இதுபோக,வெளிநாடுகளில் இருந்தும் Gold seal போன்ற சிகரெட்கள் திருட்டுத்தனமாக கொண்டுவரப்பட்டு மலிவு விலையில் விற்கப்படுகின்றன.

ஆகவே,சிகரெட்டின் விலையேற்றம் சிகரெட் பாவனையைக் குறைத்துள்ளதே தவிர புகைத்தலைக் குறைக்கவில்லை என்பதை உணர முடிகிறது.

புகைத்தலை முற்றாகக் கட்டுப்படுத்த இதைவிட விரிவான வேலைத் திட்டம் அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது.அரசு இந்த நிலைமையைக் கவனத்தில் எடுக்கட்டும்.
சிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள் சிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள் Reviewed by Vanni Express News on 8/06/2018 05:08:00 PM Rating: 5