நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதே எமக்கு சவாலாக உள்ளது - பெசில் ராஜபக்ஷ

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னர் நாட்டை நிர்வாகம் செய்யும் முறை சம்பந்தமாக தற்போது திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி கலவான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான தேசிய போராட்டம் என்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் கூறியுள்ளார். 

இந்த நாட்டைப் பொறுப்பெடுத்து எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக இரவு பகலாக திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். 

தற்போதைய அரசாங்கம் மேற்கொள்கின்ற தேசிய துரோக மற்றும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதே எமக்கு தற்போது சவாலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதே எமக்கு சவாலாக உள்ளது - பெசில் ராஜபக்ஷ நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு என்பதே எமக்கு சவாலாக உள்ளது - பெசில் ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 8/05/2018 04:50:00 PM Rating: 5