மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக பேருந்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது

புகையிரத வேலை நிறுத்தத்தை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை, பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. 

நேற்றைய தினத்தில் இருந்து இடம்பெறும் வேலை நிறுத்தத்தை அடுத்து மக்கள் பெறும் சிரமங்களுக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை கட்டுபடுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது 500 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் இராணுவத்தினரின் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்துடன் வீதி அனுமதிப் பத்திரத்தை கருத்திற்கொள்ளாது எந்த ஒரு பேருந்து எந்த பகுதிகளிலும் சேவையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இவை தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பாக 0117 505 555 என்ற தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக பேருந்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக பேருந்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது Reviewed by Vanni Express News on 8/09/2018 11:14:00 PM Rating: 5