பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்று பைகள்

அங்காடி வர்த்தக நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் ஆடைத் தொழில்துறை தயாரிப்புக்களை விற்பனை செய்யும் போது பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்று பைகளை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பில் இந்த வர்த்தகர்களின் கவனத்தை ஈர்க்க மத்திய சுற்றாடல் அபிவிருத்தி சபை தீர்மானித்துள்ளது. விசேடமாக கடதாசியில் தயாரிக்கப்பட்ட பைகளை வர்த்தர்கள் பயன்படுத்துவதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். தேசிய சிற்ப சபைகளுடன் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் ஜே.எம்.பி. இந்திரரட்ன தெரிவித்தார்.


தேசிய சிற்ப சபையின் தயாரிப்புக்களின் வலைப்பின்னலை இதில் தொடர்புபடுத்தப்படவுள்ளது. தற்பொழுது இது தொடர்பான தேசிய சிற்ப சபையுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் ஜே.எம்.பி. இந்திரரட்ன மேலும் தெரிவித்தார்.
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்று பைகள் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்று பைகள் Reviewed by Vanni Express News on 8/12/2018 04:18:00 PM Rating: 5