கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

கோழி இறைச்சியின் மூலம் கூடுதல் புரதம் கிடைப்பதாக பலர் நம்பலாம். ஆனால், உணவுப் பொருள்களுடன் தொடர்புடைய நோய்களைப் பொறுத்த வரையில், கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மற்றும் தவிர்ப்பு நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையம் உணவின் மூலம் பரவக்கூடிய நோய்களுக்கான காரணிகள் பற்றி ஆய்வு செய்தது.

2009ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையிலான தரவுகள் ஆராயப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் ஐயாயிரத்து 700ற்கு மேற்பட்ட தடவைகள் உணவுப் பொருள்களால் நோய்கள் பரவியிருந்தன.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு 145 பேர் மரணத்தைத் தழுவியிருந்தார்கள்.

இதில் மூவாயிரத்தி;ற்கு மேற்பட்டோர் கோழி இறைச்சியுடன் தொடர்புடைய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு கோழி இறைச்சியின் மூலம் பரவும் நோய்கள் அதிகம் - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு Reviewed by Vanni Express News on 8/06/2018 11:43:00 PM Rating: 5