அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமை விராட் கோஹ்லிக்கு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 107 ஓட்டங்களில் சுருண்ட போதிலும், விராட் கோஹ்லி ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 107 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணித்தலைவர் விராட் கோஹ்லி 23 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம், 2018ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். இதுவரை 25 இன்னிங்ஸ்களில் கோஹ்லி 1,404 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கோஹ்லிக்கு அடுத்த இடங்களில் 1,389 ஓட்டங்களுடன் பேர்ஸ்டோவ், 1,338 ஓட்டங்களுடன் ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர்.
அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமை விராட் கோஹ்லிக்கு அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமை விராட் கோஹ்லிக்கு Reviewed by Vanni Express News on 8/11/2018 10:06:00 PM Rating: 5