மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி முன்னிலையில்

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது. 

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ரீஸா 102 ஓட்டங்களையும், டுமினி 92 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 75 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 

அதன்படி 364 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பாக அதிக பட்சமாக தனஞ்சய டி சில்வா 85 ஓட்டங்களையும் அகில தனஞ்சயன் 37 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர். 

இந்நிலையில் இலங்கை அணியுடன் இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் உள்ளமை கூறத்தக்கது.
மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் Reviewed by Vanni Express News on 8/05/2018 10:53:00 PM Rating: 5