தொலைபேசி உரையாடல்களை சட்ட விரோதமான முறையில் பதிவு செய்யக்கூடிய கருவி பொலிஸாரிடம் ?

எந்தவொரு நபருடைய தொலைபேசி உரையாடல்களையும் சட்ட விரோதமான முறையில் பதிவு செய்துக்கொள்ளக்கூடிய உயர் தொழில்நுட்ப கருவி ஒன்று இலங்கைக்கு எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

இன்று (08) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த கருவி ஜப்பானில் தயாரிக்கப்பட்டதெனவும், அதனை பொதுவாக இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

´நெக்´ (NEC) என அழைக்கப்படும் குறித்த கருவி நுகேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல்களை சட்ட விரோதமான முறையில் பதிவு செய்யக்கூடிய கருவி பொலிஸாரிடம் ? தொலைபேசி உரையாடல்களை சட்ட விரோதமான முறையில் பதிவு செய்யக்கூடிய கருவி பொலிஸாரிடம் ? Reviewed by Vanni Express News on 8/08/2018 05:00:00 PM Rating: 5