வாய்த்தர்க்கம் நீண்டதில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் - நாகவல்லுவ , பலாவி பிரதேசத்தில் நபரொருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் அதில் ஒருவர் மற்றையவரின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு உள்ளான நபர் கவலைக்கிடமான நிலையில் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவற்துறை தெரிவித்தது.

சம்பவத்தில் நாகவல்லுவ , பலாவி பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
வாய்த்தர்க்கம் நீண்டதில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை புத்தளத்தில் சம்பவம் வாய்த்தர்க்கம் நீண்டதில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை புத்தளத்தில் சம்பவம் Reviewed by Vanni Express News on 8/05/2018 05:34:00 PM Rating: 5