இரண்டு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ பெற்றௌசோ டெவன்போல் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

பெண் 30 வயதுடைய சிவலிங்கம் நிர்மாலா எனும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பெண் தனது பிள்ளைகள் இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் நன்றாக படிக்கவேண்டும் எனவும் நான் நாளை இருக்க மாட்டேன் நீர் தேக்கம் ஒன்றில் பாய்ந்துவிடுவேன் என தனது பிள்ளைகளிடம் கூறியதாக சடலமாக மீட்கபட்ட பெண்ணின் முதலாவது பிள்ளை பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்தள்ளது. 

சில மணி நேரம் நித்திரையில் இருந்த தாயை கானவில்லையென முதல் மகள் எழுந்து தேடி பார்க்கும் பொழுது அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கூச்சலிட்டதை தொடர்ந்து அயல்வீட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கபடுகிறது. 

சம்பவம் தொடர்பில் திடீர் மரணவிசாரனையாளர் திருமதி லக்ஷ்மி தலைமையில் மரண விசாரனைகள் இடம் பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு பிரதே பரிசோதனை நிறைவடைந்த பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கபட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர் 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 
இரண்டு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு இரண்டு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு Reviewed by Vanni Express News on 8/12/2018 03:58:00 PM Rating: 5