8 வயதுடைய சிறுமி நீர் தாங்கியினுள் விழுந்து பலி சோக சம்பவம்

தனமல்வில, ஊவா குடா ஓயா பகுதியில் நீர் தாங்கியினுள் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஊவா குடா ஓயா பகுதியை சேர்ந்த தனமல்வில ஆரம்ப பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய அமாஷி விந்தீவரி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தனது வீட்டில் நீர் நிறைத்து வைத்திருந்த தாங்கி ஒன்றில் விழுந்து குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தாங்கியில் விழுந்திருந்த சிறுமியை தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

சடலம் தனமல்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 வயதுடைய சிறுமி நீர் தாங்கியினுள் விழுந்து பலி சோக சம்பவம் 8 வயதுடைய சிறுமி நீர் தாங்கியினுள் விழுந்து பலி சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 8/09/2018 04:06:00 PM Rating: 5