உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஓர் அவசர செய்தி

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நேர அட்டவணை தொடர்பில் பிரச்சினைகள் நிலவின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

0112 78 42 08, 0112 78 45 37 அல்லது 1911 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஓர் அவசர செய்தி உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஓர் அவசர செய்தி Reviewed by Vanni Express News on 8/11/2018 11:40:00 PM Rating: 5