சாதாரண எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

விலைச் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென்று நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. 

இதற்கமைவாக சாதாரண எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது. ஒக்ரேன் 92 வகையைச் சேர்ந்த ஒரு லீற்றர் பெற்றோல் 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 118 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஆனால் ஒக்ரேன் 95 வகையைச் சேர்ந்த ஒரு லீற்றர் பெற்றோல் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 130 ரூபாவாகும் .என்று நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
சாதாரண எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது சாதாரண எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது Reviewed by Vanni Express News on 8/10/2018 11:54:00 PM Rating: 5