தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கைக்கு மீண்டும் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதற்பாதியில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் 228 கோடி டொலராக இருந்தது.

இவ்வாண்டு இது 235 கோடி டொலர் வரை உயர்ந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவிற்கு ஆகக்கூடுதலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதன் மூலம் 104 கோடி டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 8/08/2018 05:25:00 PM Rating: 5