இலங்கையில் இதய நோயினால் நாளொன்றுக்கு 120 - 150 பேர் வரை உயிரிழப்பு

இலங்கையில் இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் பிரதானி விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார். 

இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார்.
இலங்கையில் இதய நோயினால் நாளொன்றுக்கு 120 - 150 பேர் வரை உயிரிழப்பு இலங்கையில் இதய நோயினால் நாளொன்றுக்கு 120 - 150 பேர் வரை உயிரிழப்பு Reviewed by Vanni Express News on 8/04/2018 04:38:00 PM Rating: 5