ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கிறது

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் (ஐஓசி) கூறியுள்ளது. 

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் இரண்டு வகையான எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார். 

அதன்படி ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், யூரோ 04 வகையான சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 158 ரூபாவில் இருந்து 160 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக ஐஓசி கூறியுள்ளது. 

எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கிறது ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கிறது Reviewed by Vanni Express News on 8/11/2018 04:35:00 PM Rating: 5