தேர்தலை பிற்போடுவது தவறான செயற்பாடு - மஹிந்த தேசப்பிரிய

தேர்தலை பிற்போடுவது தவறான செயற்பாடு என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாவட்டத்தின் பிரதேச சபைகளுக்கு தெரிவான பெண் உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு ஒன்று நேற்று (06) தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போதுள்ள தேர்தல் முறைமையானது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் அனைவரினாலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும். 

மேலும், தேர்தல் முறைமை தொடர்பில் சமுதாயத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலை பார்த்து பயப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசியல் என்பது தொற்று நோயோ அல்லது பயங்கரமான விடயமோ இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
தேர்தலை பிற்போடுவது தவறான செயற்பாடு - மஹிந்த தேசப்பிரிய தேர்தலை பிற்போடுவது தவறான செயற்பாடு - மஹிந்த தேசப்பிரிய Reviewed by Vanni Express News on 8/07/2018 05:02:00 PM Rating: 5