ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை வெற்றி வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரத வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. 

ஜனாதிபதியுடன் பொலன்னறுவையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத இயந்திர ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். 

இந்த போது வேலை நிறுத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் தங்களது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விரைவில் தீர்வு ஒன்றை தருவதாக உறுதியளித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை வெற்றி வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை வெற்றி வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது Reviewed by Vanni Express News on 8/12/2018 03:13:00 PM Rating: 5